Thursday 2nd of May 2024 10:12:54 PM GMT

LANGUAGE - TAMIL
-
கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும்  நோக்குடன் அரசால் 4 முக்கிய குழுக்கள் அமைப்பு!

கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் அரசால் 4 முக்கிய குழுக்கள் அமைப்பு!


கிராமிய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவது குறித்துக் கவனம் செலுத்திவரும் அரசாங்கம் அதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்த நான்கு பிரதான குழுக்களை அமைத்துள்ளது.

சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு, வாழ்வாதார மேம்பாட்டு குழு, உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு, கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு ஆகிய நான்கு குழுக்களின் மூலம் நாடளாவிய ரீதியில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் போது மாகாண மட்ட, மாவட்ட மட்ட, பிரதேச மட்ட மற்றும் கிராமிய மட்ட அமைச்சுக்களில் வேலைத்திட்டங்களை தயார்ப்படுத்தி கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வகையிலான விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படள்ளது.

பிரதான நான்கு குழுக்களில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குழு தலைவர்கள் ஆகியோர் உள்ளடங்குவதுடன், அந்தந்த மாகாணங்களின், மாவட்டங்களின், பிரதேச அரசியல் தலைவர்கள் மற்றும் பிரதேச மற்றும் கிராம மட்டத்திலான அரச அதிகாரிகள் உள்ளடங்குவர்.

இந்த தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களை தெளிவூட்டும் வகையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற இன்று நிகழ்வொன்று இடம்பெற்றது.

கடந்த தேர்தல்களின் போது சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்வைத்த கிராம மட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட அமைப்பொன்றை உருவாக்குதல் தொடர்பான முன்மொழிவை நிறைவேற்றுவதற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை திறம்பட பயன்படுத்தக்கூடிய வகையில் செயற்படுதல் இந்த தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது என இதன்போது கருத்து வெளியிட்ட பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க தெரிவித்தார்.

இந்த குழுக்கள் மாவட்ட மட்டத்தில் ஒன்றுகூடும் சந்தர்ப்பத்தில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் பிரதேச அதிகாரிகள் ஆகியோரை அதில் இணைத்து கொள்வதன் மூலம் திட்டங்களை மிகவும் திறமையாக தொடங்க முடியும் என்று நம்பப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆலோசனைக்கேற்ப பிரதமர் அலுவலகத்தின் கீழ் இந்த வேலைத்திட்டத்தை ஒருங்கிணைப்பதன் ஊடாக கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அரசாங்க அதிகாரிகளை திறம்பட ஈடுபடுத்திக் கொள்வதற்கு இதன் மூலமாக எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE